செய்திகள்

கதை கேட்காமல் சந்திரமுகியாக நடிக்க ஒப்புக்கொண்ட கங்கனா!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதை கேட்காமலேயே கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

DIN

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பி.வாசு, ‘இப்படத்திற்கு சந்திரமுகி யார் என்பதை தேர்வு செய்வதற்கு முன்பே பெரும்பாலான படப்பிடிப்புப் பணிகளை முடித்துவிட்டேன். படக்குழுவினருக்கு யார்தான் சந்திரமுகி என்கிற ஆவல் இருந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில் ஒரு ஹிந்தி படத்திற்கான கதையைச் சொல்ல கங்கனா ரணாவத்தைச் சந்தித்தேன். அவர், நான் எடுத்துக்கொண்டிருந்த படத்தைக் குறித்துக் கேட்டார். சந்திரமுகி - 2 என்றேன். உடனே, உற்சாகமடைந்த அவர் யார் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கேட்டார். நான் இன்னும் முடிவுசெய்யவில்லை என அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தேன். அடுத்த நாள் கங்கனாவே அழைத்து சந்திரமுகி கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என்றதுடன் கதை கேட்காமலேயே இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் நடிப்பை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்’ எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT