செய்திகள்

இம்முறை இரண்டு வீடு: பிக் பாஸ் முன்னோட்டக் காட்சியில் தகவல்!

இம்முறை இரண்டு வீடு என்று பிக் பாஸ் முன்னோட்டக் காட்சியில் கமல்ஹாசன் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.

DIN

இம்முறை இரண்டு வீடு என்று பிக் பாஸ் முன்னோட்டக் காட்சியில் கமல்ஹாசன் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 8 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆறு சீசன்களை தொடர்ந்து 7வது சீசனிலும் கமல்ஹாசனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

தற்போது,  பிக் பாஸ் 7வது சீசனக்கான முன்னோட்டக் காட்சி ஒன்று நேற்று வெளியானது. அதில், கமல் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வது அமைந்துள்ளது.

அந்தக் காட்சியில் கமல்ஹாசன், இம்முறை பிக் பாஸ் வீடு இரண்டாக மாறியிருக்கிறது  என்று கூறியுள்ள தகவல், இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ரேகா நாயர், நடிகர் பிரித்விராஜ்(பப்லு), தொகுப்பாளினி ஜாக்லின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கவுள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சியில் மட்டுமே தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT