செய்திகள்

சர்வதேச தரத்தில் அனிமல் திரைப்படம்: நடிகர் நானி புகழாரம்!

பிரபல தெலுங்கு நடிகர் நானி அனிமல் படத்தினை குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார். 

DIN

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது எக்ஸ் பக்கத்தில், “அனிமல் சர்வதேச தரத்தில் உள்ளது. சந்தீப் வங்கா மேட் ஜீனியஸ். ரன்பீர், ராஷ்மிகா, மற்ற படக்குழுவினருக்கும் தலை வணங்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

படம் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்து வசூல் சாதனை படைத்துள்ளது. நானியின் ஹாய் நான்னா படமும் தந்தையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படம் டிச.7ஆம் தேதி வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT