செய்திகள்

விஜய் குமார் பெயரும் என் பெயரும் ஒன்றாக வரவேண்டி 2017-இல் இருந்து முயற்சிக்கிறேன்: லோகேஷ் கனகராஜ் 

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் முதல் திரைப்படமாக வெளிவருகிறது ‘ஃபைட் கிளப்’ திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.  

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள  'ஃபைட் கிளப்' படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்குக் கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்கப் படத்தொகுப்புப் பணிகளைக் கிருபாகரன் மேற்கொண்டு இருக்கிறார்.  சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் - அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது: 

இந்தப்படம் மாநகரம் மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை. உறியடி விஜய் குமார், அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017இல் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார். எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன். இந்தப்படத்தை நான் வெளியிடுவது படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல; நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விஷயம் அவ்வளவுதான். இந்தப்படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு  கடினமாக உழைத்திருக்கிறார்கள். விஜய் குமாரை தவிர இந்தப்படத்தில் பல புதுமுகங்கள் உழைத்துள்ளார்கள். படத்திற்குப் பிறகு எல்லோரும் பெரிதாகப் பேசப்படுவார்கள்.  நான் படம்  செய்ய ஆசைப்பட்ட போது என் நண்பர்கள்தான் பணம் போட்டு குறும்படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. எனக்காக மட்டுமே செய்தார்கள். அதேபோல் நான்கு பேருக்கு நான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன், அவ்வளவுதான். அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம். ஜி ஸ்குவாட் நிறுவனத்தோட அபீசியல் பார்ட்னர்ஸ் ஜெகதீஷ் மற்ரும் சுதன் இருவரும்தான். அவர்களுக்கும் நன்றி.   நல்ல படங்களைத்தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். அனைவருக்கும் நன்றி எனப் பேசினார். 

நேற்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT