அனுராக் காஷ்யப் 
செய்திகள்

80 சதவீத இந்திய ஆண்கள் கபீர் சிங்குகள்தான்: அனுராக் காஷ்யப்

அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிலளித்துள்ளார்.

DIN

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை, உலகளவில் இப்படம் ரூ.425 கோடியை வசூலித்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் பெண்கள் மோசமாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக,  ரன்பீர் சிங் மற்றும் பாபி தியால் கதாபாத்திரங்கள் பெண்களை மோசமான முறையில் கையாள்வதாக விமர்சனங்கள் எழுந்தன. 

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டி ஒன்றில், “ஒரு இயக்குநர் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதை யாரும் போதிக்கக் கூடாது. இந்த நாட்டில் ஒரு படத்தின் மூலம் சுலபமாக மக்கள் புண்படுகிறார்கள். என் படத்தாலும் புண்படுகிறார்கள். ஆனால், நான் படித்தவர்கள் புண்படக்கூடாது என எதிர்பார்க்கிறேன். ஒருவகையில், 80 சதவீத இந்திய ஆண்கள் கபீர் சிங்குகள்தான் (அர்ஜூன் ரெட்டி). யாரும், எப்படி வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி திரைப்படங்களை எடுக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT