’நீ கண்டதெல்லாம் பொய்..’: மலைக்கோட்டை வாலிபன் டீசர்!
நடிகர் மோகன் லால் - லிஜோ ஜோஸ் பெல்லிசரி கூட்டணியில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டின் டாப் 10 சீரியல்கள்!
தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி வருகிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: 80 சதவீத இந்திய ஆண்கள் கபீர் சிங்குகள்தான்: அனுராக் காஷ்யப்
இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு (2024) பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது!