செய்திகள்

யோகி பாபு பட டீசரை வெளியிடும் 5 பிரபலங்கள்

சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  7 வருடங்களுக்குப் பிறகு அவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். போட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக யோகி பாபு நாயகனாக நடிக்கிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.  முழுக்க முழுக்க கடலை மையமாகக்கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 5 மொழிகளில் வெளியாகும் டீசரை தமிழில் விஜய் சேதுபதி, இந்தியில் அமீர் கான், மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் கிச்சா,  சுதீப், தெலுங்கில் நாக சைதன்யா ஆகியோர் வெளியிடுகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசனில் சிலம்பரனுக்கு 3 தோற்றங்கள்!

கெட்டி மேளம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!

எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு நிமிடத்தில் முடங்கிய மக்களவை!

இஸ்ரோவில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

பங்குச்சந்தை வீழ்ச்சி! அனைத்துத் துறைகளும் சரிவுடன் வர்த்தகம்!

SCROLL FOR NEXT