செய்திகள்

வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும்: இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள்

வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

DIN

வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின்  வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 2 நாள்காக கனமழை பெய்து வருகிறது. 

வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT