செய்திகள்

எனக்கு ஓசிடி பாதிப்பிருக்கிறது: சலார் இயக்குநர் பிரசாந்த் நீல்!

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் தனக்கு ஓசிடி நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

DIN

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல்  நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், “சலார் படமும் கேஜிஎஃப் படமும் வெவ்வேறானது. ஒரே மாதிரி கருப்பாக இருப்பதால் அப்படி நினைக்கலாம். எனக்கு ஓசிடி பாதிப்பு இருக்கிறது. அதனால் படத்தில் வருபவர்களுக்கு வண்ணமயமான ஆடைகள் யாரும் அணிந்தால்கூட பிடிக்காது. என்னுடைய குணாம்சம்தான் திரையில் பிரதிபலிக்கிறது. சலார் படத்தில் டிராமா இருக்கிறது. அது நிச்சயமாக மக்களுக்கு பிடிக்கும்” என்று கூறினார். 

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவுக்கும் ஓசிடி பாதிப்பு இருப்பதாக அவரே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். 

ஓசிடி என்றால் என்ன? 

ஓசிடி என்பது அப்சஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் எனும் மனநோய். மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் பல வகைகள் இருக்கின்றன. தூய்மை குறித்த பயம், வண்ணங்கள் குறித்த பயம், தொடர்சியான ஒரே செயல், சிந்தனை என பல வகைகளில் இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT