நடிகர் விஜய் (கோப்புப் படம்) 
செய்திகள்

விஜய் 68 படத்தின் பெயர் இதுதானா? தயாரிப்பாளர் விளக்கம்

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படத்தின் பெயர் குறித்த பதிவுகளுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்.

DIN

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படத்தின் பெயர் குறித்த பதிவுகளுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,  சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே, விஜய் 68-வது திரைப்படத்துக்கு பாஸ்(Boss) என்று பெயரிட்டுள்ளதாக ஒருபுறமும், பஸ்ஸில்(puzzle) என்ற பெயரை வைத்துள்ளதாக மறுபுறமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், ரசிகர்களின் பதிவுகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“உங்கள் அன்புக்கு நன்றி. வெங்கட் பிரபு வித்தியாசமான ஒன்றை தயாரித்து வருகிறார். அமைதியாக காத்திருங்கள், விரைவில் உண்மையான பெயர் வெளியாகும். ஆனால், கண்டிப்பாக பாஸ் அல்லது பஸ்ஸில் என்ற பெயர் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT