செய்திகள்

நயன்தாராவின் அன்னபூரணி: ஓடிடி தேதி அறிவிப்பு!

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. 

நயன்தாராவின் 75-வது படமாக அன்னபூரணி எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார். 

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். 

இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் செஃபாக நடிகை நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். 

டிச.1 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டிச.29ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலிங்கும், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படத்தினை பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT