செய்திகள்

பாம்பு நடனமாடும் எதிர்நீச்சல் நடிகை! வைரல் விடியோ!!

DIN

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை மதுமிதா சக்தியுடன் இணைந்து பாம்பு நடனமாடுவதைப்போன்று பதிவிட்டுள்ள விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

படப்பிடிப்புக்கு மத்தியில் அவ்வபோது விடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்ட மதுமிதா, தற்போது சக்தியுடன் இணைந்து வெளியிட்டுள்ள விடியோவால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடியோ பதிவில் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடரில் ஜனனி பாத்திரத்தில் நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சக்தி பாத்திரத்தில் நடிகர் சபரி பிரசாந்த் நடித்து வருகிறார். 

ஜனனி - சக்தி ஜோடிக்கு சின்னத்திரையில் வரவேற்பு அதிகம். சமூக வலைதளங்களிலும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் ஏராளம். 

நடிகை மதுமிதா - நடிகர் சபரி

பல தொடர்களில் நாயகன் - நாயகிக்கு அவர்கள் நடிக்கும் நெருக்கமான அல்லது காதல் காட்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். 

ஆனால், எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் சக்தி - ஜனனி ஜோடிக்கு இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவிடும் கேளிக்கை விடியோவுக்கு ரசிகர்கள் அதிகம்.

எதிர்நீச்சல் தொடரிலும் சக்தி பாத்திரத்தில் சபரியும், ஜனனி பாத்திரத்தில் மதுமிதாவும் நல்ல நடிப்பை வழங்கிவருகின்றனர். சிறந்த நடிகைக்காக சின்னத்திரை விருதை ஜனனி பாத்திரத்தில் நடித்ததற்காக கடந்தமுறை நடிகை மதுமிதா பெற்றிருந்தார்.

எதிர்நீச்சல் தொடரில் சக்தி (சபரி) - ஜனனி (மதுமிதா)

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எடுக்கும் புகைப்படங்களையும் விடியோக்களையும் எதிர்நீச்சல் குழு அவ்வபோது சமூகவலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். 

அந்தவகையில், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நகைச்சுவை வசனத்துக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை நடிகை மதுமிதா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு சின்னத்திரை பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் தங்கள் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT