லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும், விஜய்யின் 68-வது படத்தின் பெயர் கோட் (G.O.A.T. - Greatest Of All Times) என்று தகவல் பரவி வருகிறது.
இதையும் படிக்க: இயக்குநர் சந்தீப்பின் விசிலால் உருவாகிய பின்னணி இசை: இசையமைப்பாளர் பகிர்ந்த சுவாரசிய விடியோ!
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்டு நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.