செய்திகள்

எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் கில்லி பட நடிகை!

எதிர்நீச்சல் தொடரில் கில்லி பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

எதிர்நீச்சல் தொடரில் கில்லி பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும்.  அதிலும்  எதிர்நீச்சல் தொடர் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும். நடிகர் மாரிமுத்துவுக்கு பிறகு, இத்தொடரின் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டது.

ஆனால், தற்போது இத்தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மாரிமுத்துவுக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்துவருகிறார். 

இத்தொடரில் சத்யப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது கதையில் ஜனனி அப்பாவின் அண்ணன் மகன்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜனனி உடைய அப்பாவின் அம்மாவாக (அப்பத்தா) டி.கே. கலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருவி படத்தில் டி,கே. கலா

டி.கே. கலா விஜய்யின் கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்திருந்தார். குருவி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமில்லாம் சிறந்த பாடகரும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் பலப் பாடல்களை பாடியுள்ளார். 

எதிர்நீச்சல் தொடரில், டி.கே. கலாவின் வருகை கதையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT