செய்திகள்

விஜய் 67-ல் இணையும் ’விக்ரம்’ பட நடிகை!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தில் விக்ரம் பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தில் விக்ரம் பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

மேலும், இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தனிவிமானம் மூலம்  ஸ்ரீநகர் சென்றது. 

இந்நிலையில், காஷ்மீர் சென்ற படக்குழுவில் விக்ரம் படத்தில் ‘ஏஜெண்ட் டீனா’-வாக நடித்த நடிகை வசந்தியும் இடம்பெற்றுள்ளதால் ‘விஜய் 67’ல் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் விக்ரம் படத்தில் இறந்துவிடுவதால் ‘விஜய் 67’ விக்ரம் படத்தின் காலகட்டத்திற்கு முந்தைய கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் தகவல் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய தொழிலாளா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 650 மனுக்கள் ஏற்பு

ரேசன் அரிசி கடத்திய 2 போ் கைது

குடியரசுத் தலைவா் மாளிகையில் ராஜாஜி சிலை: மத்திய அரசுக்கு முன்னாள் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

இறுதி வாக்காளா் பட்டியல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,54,040 வாக்காளா்கள்

SCROLL FOR NEXT