செய்திகள்

லோகேஷ் கனகராஜ் படங்களில் ஆங்கிலப் பாடல்களை எழுதும் ஹெஸ்சன்பர்க் யார்? 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பாடல்களை எழுதும் நபர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இருவரும் இணைந்து வெற்றிப் படத்தினை கொடுத்தனர். அந்தப்படம் 50-50 என எடுக்கப்பட்டது. ஆனால் இந்த தளபதி 67 படம் 100 சதவிகிதம் லோகேஷ் பாணியில் முழுக்க முழுக்க ஆக்சனாக உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று இந்தப் படத்திற்கு ‘லியோ’ எனப் தலைப்பிடப்பட்ட ப்ரோமோ வெளியானது. யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்தப் ப்ரோமோவில் வரும் ஆங்கிலப் பாடலை ஹெஸ்சன்பர்க் எழுதியுள்ளார். இவர் முன்னமே விக்ரம் படத்தில் ‘வேஸ்டட்’ எனத்தொடங்கும் ஆங்கிலப் பாடலையும் எழுதியிருந்தார். இந்தப் பாடலை எழுதியவர் யாரென கண்டுப்பிடித்து தருமாறு இயக்குநரும் வசன உதவியாளருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

மிகவும் புகழ்பெற்ற இணையத்தொடரான ‘பிரேக்கிங் பேட்'டில் வரும் கதாநாயகனின் புனைப்பெயர் ஹெஸ்சன்பர்க். லோகேஷ் இந்தத் தொடரின் ரசிகர் என்பதால் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் அது கண்டிப்பாக லோகேஷ்கத்தான் இருக்குமென கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். சிலர் அது அனிரூத் என்றும் கூறிவருகின்றனர். விரைவில் இதுகுறித்தும் அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT