செய்திகள்

ஓடிடி சினிமாவை முடித்துக்கட்டிவிடும்: அடூர் கோபாலகிருஷ்ணன்

DIN

ஓடிடி சினிமாவை முடித்துக்கட்டிவிடும் என்று கல்விச் சிந்தனை அரங்கில் பங்கேற்ற பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:

ஓடிடி சினிமாவை முடித்துக்கட்டிவிடும். ஒருபோதும் நான் ஃபோனில் படம் பார்க்க மாட்டேன். தொலைக்காட்சியில்கூட நான் படம் பார்ப்பதில்லை. சினிமா என்பது ஒரு சமூகமாக அனுபவிக்க வேண்டியது. சினிமாவுக்கான மரியாதையை நாம் கொடுப்பதில்லை.

1965-இல் திரை அனுபவத்துக்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது. இதற்குப் பிறகு சினிமா ஒரு முக்கியமான விஷயமாக கவனிக்கப்பட்டது. சத்யஜித் ரே வருகைக்கு முன்பு, இதுவொரு மரியாதைக்குரிய தொழிலாக இருக்கும் என யாரும் நம்பியதே இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT