செய்திகள்

அறிமுக இயக்குநருடன் கைகோக்கும் அதர்வா முரளி

அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில்அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

DIN

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். 

நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா 'பட்டத்து அரசன்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் கைகோர்க்கிறார். தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார். 

'100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா முரளி இத்திரைப்படத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'தணல்' படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க அஷ்வின் காக்குமானு, ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT