நடிகர் கமல்ஹாசனை சந்தித்து டாடா திரைப்பட கதாநாயகன் கவின் வாழ்த்து பெற்றுள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதனைத்தொடர்ந்து கடாரம் கொண்டான் பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கிய ‘டாடா’ படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோளும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜென் மார்டின் இசையமைத்துள்ள படத்துக்கு, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கவின் வாழ்த்து பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோயிலுக்கு சென்றேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.