செய்திகள்

'ராஜா ராணி' சீரியல் கதாநாயகி மாற்றம்: அடுத்த 'சந்தியா' இவர்தான்!

'ராஜா ராணி' சீரியலில் இருந்து விலகுவதாக ரியா விஸ்வநாத் அறிவித்துள்ளார்.

DIN

'ராஜா ராணி' சீரியலில் இருந்து விலகுவதாக ரியா விஸ்வநாத் அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ராஜா ராணி தொடர் ரசிகர்களிடையே மிக பிரபலம். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

முதல் பாகத்தின் பெரும் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகம் ஒளிரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் முதல் பாகத்திலிருந்து ஆல்யா மானஸா மட்டும் நடிக்கத் துவங்கினார். ஆனால் சில காரணங்களால் அவர் பாதியில் விலக அவருக்க பதிலாக ரியா விஸ்வநாத் நடிக்கிறார். 

 இந்த நிலையில் ரியா விஸ்வநாத் திடீரென இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

அவரது பதிவில், நான் ராஜா ராணி சீரியல் நடிக்க்க வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி. ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் இருந்து விலகுகிறேன். வேறு ஒருவர் நடிக்க உள்ளார் என்று உருக்கமாக இன்ஸ்டாகிராமில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT