செய்திகள்

ஓடிடியில் வெளியானது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’

மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் பிரபல ஓடிடியில் வெளியாகியுள்ளது.

DIN

மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் பிரபல ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இவரது இயக்கத்தில் மம்மூட்டியே தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் மலையாளத்தில் ஜன.19 ஆம் தேதியும், தமிழில் ஜனவரி 27ஆம் தேதியும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மறைந்த நடிகர் பூ ராமு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

SCROLL FOR NEXT