செய்திகள்

மெளன ராகம் -2 தொடர் முடிவுக்கு வருகிறதா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2வது அத்தியாயம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2வது அத்தியாயம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் மெளன ராகம் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருவதால், இந்த அத்தியாயத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு பெருகியுள்ளது. 

மெளன ராகம் -1 2017ஆம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் வரை ஒளிபரப்பானது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த 2021 முதல் மெளன ராகம் -2 ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் சக்தியாக ரவீனா தாஹா, கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜிவ் பரமேஸ்வர், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித், ஸ்ருதியாக ஷில்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்தத் தொடருக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனினும் தற்போதும் இந்தத் தொடர் முடிவுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் விக்ரம் வேதா, பொன்னி ஆகிய புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT