செய்திகள்

‘இளையராஜாவை சந்தித்தபோது...’- நாக சைதன்யா நெகிழ்ச்சி ட்வீட்! 

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார். 

DIN

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் ‘கஸ்டடி’. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர் என்பது சிறப்பான அம்சம். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். 

படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தப் படம்  மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கில் ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார். ராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று ஹதராபாத்தில் கச்சிபௌலி திடலில் நடைபெற உள்ளது.

இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு நாக சைதன்யா சந்தித்து பேசியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது: 

மேஸ்ட்ரோ இளையராஜா சாரை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம். அவருடைய இசை என்னுடைய வாழ்வில் பல பயணத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அதிகம் முறை அவரது இசையை மனதில் வைத்து நடித்துள்ளேன். தற்போது என்னுடைய கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT