செய்திகள்

நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பில் காயம்! 

நடிகை சமந்தா தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

DIN

தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யசோதா திரைப்படம் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. சாகுந்தலம் ஏப்.14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ தொடரிலும் நடித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா இந்த தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 

அதில் அவரது கைகளில் ரத்த காயங்கள் உள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு ‘சண்டைக்காட்சிகளின்போது கிடைத்த வெகுமதி’ என தலைப்பிட்டுள்ளார். இந்த காயம் வருண்தவானுடன் நடிக்கும் ‘சிட்டாடல்’ எனும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வட இந்தியாவில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து படக்குழு செர்பியா, தென்னாப்பிரிக்கா சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT