படங்கள்: ஷாலினி/ இன்ஸ்டாகிராம் 
செய்திகள்

வைரலாகும் நடிகர் அஜித்தின் குடும்பப் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் குமாரின் குடும்பப் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகர் அஜித் குமாரின் குடும்பப் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் அஜித்துக்கு டிவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற எந்த சமூக ஊடகங்களிலும் அதிகாரப்பூர்வ கணக்குகள் இல்லை. சமூக ஊடகங்களிலிருந்து அஜித் சற்று ஒதுங்கியே இருந்து வரும் நிலையில், அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி சில நாள்களுக்கு முன்னதாகதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கணவர் அஜித், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷாலினி வெளியிட்டுள்ளார்.

குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டுள்ள நிலையில், அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிப்பு: மத்திய அரசின் பாரபட்ச அணுகுமுறை - தொல்.திருமாவளவன்

குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்: பீட் போத்தா

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 9 தங்கத்துடன் வரலாறு படைத்தது இந்தியா

8 நகரங்களில் மிதமாக உயா்ந்த வீடுகள் விற்பனை

SCROLL FOR NEXT