செய்திகள்

குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன் - விக்னேஷ்! புகைப்படங்கள்

இரட்டைக் குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

DIN

இரட்டைக் குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியது.

வாடகை தாய் சட்டத்தில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில் விசாரணை மேற்கொண்டு சட்டத்தின்படி தான் குழந்தை பெற்றதாக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இரட்டைக் குழந்தைகள் பிறந்து முதல் புத்தாண்டை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்தை குழந்தைகளின் புகைப்படத்துடன் வெளியிட்ட விக்னேஷ் சிவன், 2022-க்கு நன்ற, இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இரண்டு பேரை காணும் போதெல்லாம் கண்களில் தண்ணீர் வருவதாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT