செய்திகள்

‘தளபதி 67’ படப்பிடிப்பு தொடங்கியது! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தினை இயக்குகிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்தப்படத்தில் நடிப்பதாகவும் இதுதான் விஜய்யின் முதல் பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், நடிகர் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கியது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். நல்ல எனர்ஜி. தூல்.” என ட்வீட் செய்திருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை டெலிட் செய்தார். மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT