செய்திகள்

ஜன.11-ல் துணிவு?

துணிவு வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

துணிவு வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.  

துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இன்னும் இரு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேநேரம், துணிவு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

துணிவு படம் ஜன.12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று விஜய்யின் வாரிசு பட டிரைலரும் வெளியாகும் என்பதால் அதனை பார்த்தபின் துணிவு வெளியீட்டுத் தேதியை போனி கபூர் உறுதிசெய்வார் எனத் தகவல் வெளியானது.

தற்போது, வாரிசு திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாவது   கிட்டத்தட்ட உறுதி என்கிற நிலையில் துணிவு படத்தை ஒருநாள் முன்பாக ஜன.11 ஆம் தேதி வெளியிட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியானால் முதல்நாள் வசூல் குறையும் என்பதால் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவை வெளியிட ஏற்பாடு நடந்துவருவதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

SCROLL FOR NEXT