செய்திகள்

அதிவேகமாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்தது 'வாரிசு’ டிரைலர்

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர்  யூடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர்  யூடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது.  வெளியான ஒரு மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் 11 லட்சம் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்திருந்தது. தற்போது, யூடியூப்பில் வெளியான 20 மணி நேரத்தில் 2.1 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது.

இப்படம் ஜன.11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

டூடுள் வெளியிட்டு இட்லியை சிறப்பித்த கூகுள்! தென்னிந்திய உணவின் அற்புதம் என்ன?

மைலாஞ்சி படத்தின் இசை, டீசர் வெளியீடு!

பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடை! தலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு சர்ச்சை!!

புதிய காதலி? ஹார்திக் பாண்டியாவின் புகைப்படங்களால் சர்ச்சை!

SCROLL FOR NEXT