செய்திகள்

'நாம் செய்ய வேண்டியவை இதுதான்..’: சமந்தா

சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

DIN

சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விழா ஒன்றில் சமந்தா கலந்துகொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இவ்விழாவில் இயக்குநர் குணசேகரன் பேசும்போது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தாதான் என்று பாராட்டினார். அவரது பேச்சைக்கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும், இயக்குநர் குணசேகரன் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், ஆனால் தயாரிப்பாளர் நீலிமா சமந்தாதான் நடிக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்தார்.

பின்னர் சமந்தா பேசும்போது, எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை என்று கூறினார்.

அதன்பின், இன்று இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்த சமந்தா, ‘நம்பிக்கையில் முதல் அடியை எடுத்து வையுங்கள். நீங்கள் ஒட்டுமொத்த படிக்கட்டையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் அடியை மட்டும் எடுத்து வையுங்கள்.” என்கிற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாசகத்தைக் குறிப்பிட்டு ’இதுதான் நாம் செய்ய வேண்டியவை’ எனத் தெரிவித்துள்ளார்.

சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT