செய்திகள்

வாரிசு, துணிவு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியில்லை!

DIN

வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அனுமதியில்லை என்று திரைத்துறை இணை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜன.11) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படங்களுக்கான சிறப்புக் காட்சிகள் நாளை அதிகாலை 1 மணிமுதல் திரையிடப்படவுள்ளன.

இந்நிலையில், ரமேஷ் மற்றும் தேவராஜன் ஆகியோரின் புகார் மனுக்களை தொடர்ந்து இந்த இரண்டு திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திரைத்துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் காலை 5 மற்றும் 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அனுமதியில்லை. அரசி நிர்ணயித்த டிக்கெட் விலையை விட அதிகமாக விற்கும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகளுக்கு வெளியே பெரிய பேனர்கள் அமைத்து பால் ஊற்றுவது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்காதது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT