செய்திகள்

’வறுமையைச் சொல்லி நம்பிக்கை தர விரும்பவில்லை..’: ஹெச்.வினோத்

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூ

DIN

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் நாளை(ஜன.11) வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.  

இந்நிலையில் இயக்குநர் வினோத் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவரிடம் ‘இயக்குநராவதற்கு முன் நீங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறீர்கள். ஆனால், அதைப் பற்றி இதுவரை ஏன் கூறியதில்லை?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு வினோத், ‘இங்கு பலருக்கும் பிரச்னைகளும் பொருளாதார சிக்கல்களும் உண்டு. நான் சந்தித்த வறுமையை வெளிகாட்ட மாட்டேன். இதுவும் வாழ்க்கையில் ஒருபகுதி. நான் மார்க்கெட், டீக்கடை போன்ற இடங்களில் வேலை பார்த்தேன். ஆனாலும் இன்று இயக்குநராகிவிட்டேன் என கனவுகளுடன் இருப்பவர்களுக்கு பொய்யான நம்பிக்கையை விதைக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT