கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
இதையும் படிக்க: தேசிய விருது பெற்ற இயக்குநர் படத்தில் விஜய் தேவரகொண்டா!
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. காந்தாரா திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரபல ஹாலிவுட் இயக்குநரை சந்தித்த ராஜமௌலி!
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் காந்தாரா இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இந்தப் பாராட்டு வருவது மிகப்பெரியதாக கருதுகிறேன். இந்த அருமையான எதிரபாராத பரிசை பார்த்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த அரியப் பரிசினை கொடுத்ததற்கு நன்றி கமல் சார்” என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.