செய்திகள்

துணிவு மூலம் அஜித் படைத்துள்ள புதிய சாதனை!

துணிவு படத்தின் மூலம் வெளிநாடுகளில் நடிகர் அஜித் குமார் புதிய சாதனையை படைதுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


துணிவு படத்தின் மூலம் வெளிநாடுகளில் நடிகர் அஜித் குமார் புதிய சாதனையை படைதுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இந்த படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தொடர்ந்து 8-வது நாளாக திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வட அமெரிக்காவில் மட்டும் துணிவு திரைப்படம் ஒரு மில்லியன் டாலர்(இந்திய மதிப்பின்படி ரூ. 8.16 கோடி) வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படத்தை வெளியிட்ட சரிகாமா சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் மில்லியன் கிளப்பில் இணைந்த முதல் அஜித் படமாக துணிவு அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT