செய்திகள்

ஜப்பானில் வசூலைக் குவிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’

DIN

ஜப்பானில் ஆர்ஆர்ஆர் திரைப்படம்  வசூலைக் குவித்து வருகிறது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில், ஜப்பானில் வெளியான இப்படம் இதுவரை ரூ.41 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவாக இந்த வசூல் சாதனை படைத்த முதல் இந்தியப் படம் இதுதான். மேலும், ஜப்பானில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’முத்து’ திரைப்படமே வசூலில்(ரூ.20 கோடி) இதுவரை  முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது, ரஜினியின் சாதனையையும் ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.

ராஜமௌலி அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வைத்து இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT