தளபதி 67: விஜய்யுடன் நடிகராக களமிறங்கும் சாண்டி மாஸ்டர்!
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில், நடன இயக்குநரான சாண்டி, நடிகராக களமிறங்கியுள்ளார்.
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில், நடன இயக்குநரான சாண்டி, நடிகராக களமிறங்கியுள்ளார்.
தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
படிக்க | விஜய் படத்தில் பிரியா ஆனந்த்: படக் குழு உறுதி செய்தது!
Advertisement
Advertisement
அந்தவகையில், தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின் ஆகியோர் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடிகராக இந்த படத்தில் களமிறங்கியுள்ளார்.
தளபதி 67 படத்திற்கு தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றவுள்ளார் என்பதை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், சாண்டி மாஸ்டர் முழுக்க முழுக்க நடிகராக களமிறங்கியுள்ளார். இதற்கு முன்பு நாயகனாக 3:33 என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.