செய்திகள்

எதிர்நீச்சல் படைத்த வரலாறு! மாலை நேரத் தொடர்களை முந்தி சாதனை!

மாலை நேரத் தொடர்களைக் காட்டிலும் இரவில் ஒளிபரப்பாகும் எதிநீச்சல் தொடர் அதிக டிஆர்பி பெற்றுள்ளது. மாலைநேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களே அதிக டிஆர்பி பெறுவது வழக்கம்.

DIN

மாலை நேரத் தொடர்களைக் காட்டிலும் இரவில் ஒளிபரப்பாகும் எதிநீச்சல் தொடர் அதிக டிஆர்பி பெற்றுள்ளது. மாலைநேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களே அதிக டிஆர்பி பெறுவது வழக்கம்.

சின்னத் திரை தொடர்கள் தற்போது அதிக அளவில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக முதன்மைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மாலைநேரத் தொடர்கள் அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இதனால், டிஆர்பி எனப்படும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட புள்ளிப் பட்டியலிலும் மாலைநேரத் தொடர்களே தொடர்ந்து முதன்மை இடத்தில் நீடித்து வந்தது.

முதலிடத்தில் நீடித்து வந்த கயல் தொடர்

இந்த வரலாற்றை திருத்தி எழுதியுள்ளது இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். கடந்த வாரம் ஒளிபரப்பான ஆதிரை - கரிகாலன் கட்டாய திருமண காட்சிகள் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. சாலையில் வைத்து பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக குடும்பமே சேர்ந்து திருமணம் செய்துவைக்கும் காட்சிகள் பலரால் பார்க்கப்பட்டுள்ளது. அந்த வாரம் முழுக்க எதிநீச்சல் தொடர் அதிக டிஆர்பி பெற்றுள்ளது.

இதனால், மாலை நேரத் தொடர்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.  இதுவரை இல்லாத வகையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பான (எதிர்நீச்சல்) தொடர் 11.16 ரேட்டிங் பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் தொடர் நாயகி மதுமிதா

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் இந்தத் தொடரில் நடித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT