செய்திகள்

திருப்பதியில் நடிகர் தனுஷ் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். 

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். 

அப்போது தனுஷ் மற்றும் அவரது மகன்கள் மொட்டை அடித்த தோற்றத்தில் இருந்தனர். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் மொட்டை அடித்து இருப்பது அவரது 50வது படத்திற்கான புதிய தோற்றம் எனக் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்  நடிக்கின்றனர் . படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர்.

 டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT