ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16இல் திரையரங்குகளில் வெளியாகி சில நாள்களிலே ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: விரைவில் வெளியாகும் காதல்
படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அமைப்புகள், வசனங்கள், கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியுள்ள விதம் உள்ளிட்டவை ஹிந்து மதத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக வட மாநிலங்களில் படத்துக்கு எதிர்ப்பு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் படிப்படியாக வசூலில் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டஷிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன். இரு கைகளையும் கூப்பி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடவுள் அனுமன் நம்மை ஒற்றுமையாக வைத்திருப்பார். மேலும் நமது புனிதமான நாடு, சனாதனம் ஆகியவற்றிற்கு உழைக்க நமக்கு சக்தியையும் வழங்குவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.