செய்திகள்

லேடி லக் நீயே...! வெளியானது அனுஷ்காவின் புதிய பாடல்!

நடிகை அனுஷ்கா நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்திலி இருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

DIN


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அனுஷ்காவை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நிவின் பாலிஷெட்டி இணைந்து நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்கள். இந்த போஸ்டரில் சமையல் கலைஞராக இருக்கும் படம் வெளியாகியது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தில் நவீன் பாலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி, ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மகேஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி பட இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். முதல் பாடலை தனுஷ் பாடியிருந்தார். தற்போது 3வது பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதிய பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.  

இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் மூலம் அனுஷ்கா மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தினை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT