செய்திகள்

இறுதிக்கட்ட பணிகளில் மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் குறித்து நடிகர் விஷால் விடியோ வெளியிட்டுள்ளார்.

DIN

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் குறித்து நடிகர் விஷால் விடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை நடிகர் விஷால் பகிர்ந்துள்ளார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை தேன்.. நடிகை ஆஸ்தா

வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸியை வென்றது இந்தியா!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்விஎம் 3 ராக்கெட்!

காகித பூ... அனன்யா நாகல்லா

கவிதைபேசுதே.. பிரியங்கா கோல்கடே

SCROLL FOR NEXT