செய்திகள்

தமன்னாவுக்கு சர்வதேச திரைப்பட விழா விருது

தமன்னாவுக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச திரைப்பட விழா விருது வழங்கப்பட்டுள்ளது.

DIN

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின்  நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 15 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி டிரெண்ட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் பிரான்சில் நடைபெற்ற இந்தோ - பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை வென்றுள்ளது. 

அதில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும் சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT