இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன். நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு குரல் கேட்கும். அதற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து இருந்தார். ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற இந்தக் காட்சிகள் 2006இல் வெளியான ஆங்கிலப் படமான ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்ஷன் படம் போலவே உள்ளதாக ட்விட்டரில் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவிட்டு இருந்தார்.
அந்தப் படத்தின் டிரைலரும் மாவீரன் பட டிரைலரும் பல ஒற்றுமைகள் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணாமாக ப்ளூசட்டை மாறனுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.
இதையும் படிக்க: 6 மாதங்களில் 125 நாள்கள்: லியோ படப்பிடிப்பு நிறைவு!
ஆரம்பத்தில் ஹிட்மேன் ஏஜெண்ட் ஜுன் எனும் கொரியப் படத்தினை காப்பியடித்து மாவீரன் எடுத்துள்ளதாக கூறியிருந்தார்கள். தற்போது ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்ஷன் படத்தில் இருந்து திருடியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருப்பதால் படக்குழுவும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.