பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார்.
தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த புரமோஷனை பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்துள்ளார். இதில் தமன்னா, கஜோல், மிருணாள் தாக்குர் என பலர் நடித்துள்ளனர். ஜூன் 29இல் நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படத்தில் படுக்கயறை காட்சிகளில் கஜோல் நடித்திருந்தார்.
தற்போது ஹாட்ஸ்டாரில் ஜூலை 14ஆம் நாள் வெளியான ‘தி ட்ரையல்’ எனும் இணையத் தொடரில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 49 வயதில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளதால சமூக வலைதளங்களில் இது குறித்து பேசு பொருளாகியுள்ளார் கஜோல். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நீங்கள் இப்படி நடிப்பது அதிர்ச்சியாக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக ஷாருக்கானுடன் முத்தக் காட்சியில் நடித்திருந்தாலும் அது இந்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.