செய்திகள்

விஜய் நடித்த பூவே உனக்காக பாணியில் புதிய தொடர்!

மீனா தொடரில் நடிகை இந்து செளத்ரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ஆனந்தராகம் தொடரில் ஷில்பா பாத்திரத்தில் நடித்து புகழ பெற்றவர். 

DIN

சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள மீனா தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதற்கு ஏற்ப புதிய தொடர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட (புரோமோ) விடியோ சமீபத்தில் வெளியானது.

பிரிந்துபோன இரு குடும்பம் மிகுந்த பகையில் உள்ளது. அந்தக் குடும்பத்தை சேர்த்துவைக்கும் வகையில் மீனா பாத்திரம் வருகிறது. இரு குடும்பத்தையும் சேர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளே மீனா தொடர். 

மீனா தொடரில் நடிகை இந்து செளத்ரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ஆனந்தராகம் தொடரில் ஷில்பா பாத்திரத்தில் நடித்து புகழ பெற்றவர். 

இந்து செளத்ரிக்கு ஜோடியாக ஜெய் சீனிவாசா குமார் நடிக்கவுள்ளார். இவர் இலக்கியா தொடரில் நடித்து கவனம் ஈர்த்தவர். 

இந்தத் தொடர் பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டது. இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், மீனா தொடர் விஜய் நடித்த பூவே உனக்காக பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக பூவே உனக்காக படத்தில் பிரிந்துபோன இரு குடும்பத்தை சேர்த்து வைப்பதற்காக நடிகர் விஜய் வருவார். அதே போன்று மீனா தொடரிலும் பிரிந்த இரு குடும்பங்களை சேர்த்துவைக்க இந்து செளத்ரி வருகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி கா்ப்பம்: சிறுவன் மீது போக்ஸோ வழக்கு

கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி வழங்கல்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி

திருமணம் ஆனதை மறைத்து மோசடி: இளைஞா் கைது

ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா, 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT