செய்திகள்

விஜய்க்கு மங்காத்தா, பில்லா மாதிரி பிஜிஎம்: யுவன் சங்கர் ராஜா

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படம் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்துகட்ட பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட யுவனிடம் இப்படம் குறித்தும் நடிகர் அஜித் நடித்த மங்காத்தா, பில்லா படங்களில் இடம்பெற்ற பின்னணி இசையைப்போல் விஜய்க்கும் எதிர்பார்க்கலாமா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு யுவன், ‘கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இன்னும் அதற்கான வேலையை நான் ஆரம்பிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன்’ என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT