துல்கர் சல்மான் - வெங்கி அட்லூரி படத்தின் பெயர் அறிவிப்பு!
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்துல்கர் சல்மான் - வெங்கி அட்லூரி படத்தின் பெயர் அறிவிப்பு!
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து ’கிங் ஆஃப் கோதா’ என்ற புதிய படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
இது பான் இந்தியப் படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கு ’லக்கி பாஸ்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் மகாராஜா படப்பிடிப்பு!
வெங்கி அட்லூரி நடிகர் தனுஷை வைத்து ‘வாத்தி’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் விமர்சன ரீதியாக தோல்விப்படமானது குறிப்பிடத்தக்கது.