செய்திகள்

குக் வித் கோமாளி - 4: வெற்றியாளர் பெற்ற பரிசுத் தொகை எவ்வளவு?

வழக்கமான சீரியல்களைத் தாண்டி, மக்களிடையே மிக அதிக ஆதரவு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி - 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

DIN


வழக்கமான சீரியல்களைத் தாண்டி, மக்களிடையே மிக அதிக ஆதரவு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி - 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சியில், மைம் கோபி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், கடந்த 4 சீசனில், வாகை சூடிய முதல் ஆண் போட்டியாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோப்பையுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அவர் வென்றுள்ளார். வெற்ற பெற்ற மைம் கோபி, தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இரண்டாம் பரிசை நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், மூன்றாம் பரிசை நடிகை  விசித்திராவும் வென்றனர். இறுதிப் போட்டியை சிறப்பிக்கும் வகையில், நடிகர் பரத், நடிகை வாணி போஜன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த இறுதிப் போட்டியே, கோமாளியாக இருந்து குக்காக மாறிய ஷிவாங்கிக்குக் கடைசி நிகழ்ச்சி என்பதால், அவரது உரை மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT