செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நுழையும் கிரிக்கெட் வீரர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இரு கிரிக்கெட் வீரர்கள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இரு கிரிக்கெட் வீரர்கள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சக்கரவர்த்தி அருண் மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT