செய்திகள்

படத்தின் புரமோஷனுக்காக கேவலமான செயல்: கஜோலை விமர்சிக்கும் இணையவாசிகள்! 

பிரபல பாலிவுட் நடிகை கஜோலை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

DIN

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே' திரைப்படம் இந்தியாவிலேயே அதிக நாள் திரையிடப்பட்ட(1000 வாரங்கள்) படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது. 

தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார். இறுதியாக, தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 

திடீரென நேற்று இன்ஸ்டாகிராமில் நுழைந்த கஜோல், ’என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டதுடன் தன் பழைய பதிவுகள் அனைத்தையும் அழித்து இன்ஸ்டாவிலிருந்து வெளியேறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது அது 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இதை செய்துள்ளதாக தெரிகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 12ஆம் தேதி இதன் டிரைலர் வெளியாகுமென கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், “இது கேவலமான புரமோஷன்”, “ரசிகர்களின் உணர்சிகளை இப்படிதான் பயன்படுத்துவீர்களா?” என விமர்சித்து வருகின்றனர்.  

‘ஷேம்ஆன் கஜோல் ஹாட்ஸார்’ எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT